17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள்சுவாசம்!

இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள்சுவாசம்!

எழுதியவர்: Askar March 5, 2020, 9:23 am

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள்சுவாசம்!

கவிஞர்,கப்ளிசேட்

தொடருக்குள் நுழையும் முன் ஒரு அறிமுகம்!

இன்று உலகம் முழுவதும் இஸ்லாமை இல்லாமல் ஆக்க குறி வைத்திருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற போலி கட்டமைப்புகள், இஸ்லாமிக்ஃபோபியா என்ற இஸ்லாமை புரியாமல் புறக்கணிக்கிற வெறுப்புகள், அச்சங்கள், என்று முஸ்லீம் சமூகம் மிகுந்த சவாலை எதிர்கொள்கிறது.

இன்றைய இந்தியா, முஸ்லீம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

பாசிசவாதிகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது நூற்றாண்டு கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைக்க முயல்கிறார்கள்.

அதற்கான எந்த எல்லைக்கு செல்லவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இவர்கள் ஸ்பெயினிலிருந்தும், ஜெர்மனியின் நாஜிக்களிடமும், இத்தாலியின் முசோலினியிடமும் நேரில் பாடம் படித்தவர்கள். இவர்களுக்கான தோல்வி துவங்கும் புள்ளியை கண்டுபிடிப்போம்.

உலகின் பெரிய மதமான கிறிஸ்தவம் கத்தோலிக்கம், புரோட்டஸ்டண்டு என்ற இரு பிரிவுகளாக இருக்கிறது.

உலகின் மக்களதொகையான சுமார் 700 கோடியில் சுமார் 250 கோடி கிறிஸ்தவர்களில், கத்தோலிக்கர்கள் சுமார் 150 கோடியும், புரோட்டஸ்டண்டுள் சுமார் 100 கோடிகளும் இருக்கலாம்.

முஸ்லீம்கள் சுன்னி, சியா,என்று இரு பிரிவுகளாக இருக்கிறார்கள். சியாக்கள் முஸ்லீம்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

உலக முஸ்லீம்களின் மக்கள் தொகையான சுமார்180 கோடியில12 கோடி சியா முஸ்லீமகள் இருக்கலாம். சுன்னிகள சுமார் 168 கோடி மக்கள் தொகை இருக்கலாம்.

மூன்றாவது பெரியமதமாக எந்த மதத்தையும் சாராதவர்கள் உலகில்120 கோடிகள் இருக்கலாம்.

இந்துக்களின் மக்களதொகை சுமாராக 105-110 கோடிகள் இருக்கலாம்.

அந்த வகையில் உலகில் தனித்துவமாக சுன்னி முஸ்லீம்களே அதிகமாக உள்ளனர்.

உலகில் முஸலீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி 2050 ஆம் ஆண்டுகளில் பலமடங்குகளாக பெருகும் என்பது மற்றமதங்களுக்கு பொறாமையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நிறைய ஐரோப்பிய நாடுகள் 25-30 வருடங்களில் முழு இஸ்லாமிய நாடாக மாறும் விகிதத்தில் அங்கு இஸ்லாமிய வளர்ச்சி இருக்கிறது.

இந்தியாவில் முஸ்லீம்களின் வளர்ச்சி இந்துத்துவவாதிகளை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் இஸ்லாமிய முழு உலக வரலாறுகளை அறிவது அவசியம்.

இஸ்லாம் வீழ்ச்சியை சந்தித்தபோதெல்லாம் எப்படி எழுச்சிபெற்றது என்பதெல்லாம் இன்றைக்கு தேவையான செய்திகள்.

இஸ்லாத்தின் வசீகரங்களையும் வெற்றிகளையும் இனி பேசுவோம்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் ஆற்றிய பங்குகள், இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை,இனி வரும்காலங்களில் முஸ்லீம்கள்நடந்து கொள்ளவேண்டிய முறைகள், போன்றவற்றை இத்தொடரில் இறைவன் நாடினால் தொடர்ந்து பேசுவோம்.!

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள்சுவாசம்!

என்ற எனது தொடரை படியுங்கள்! கருத்துக்களை பதியுங்கள்! உங்கள் ஆலோசனைகளையும் வழங்குங்கள்!

அன்புடன்…! கப்ளிசேட் 05.03.20

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!