“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்”(WJUT) நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ‘வின்டிவி’ நிறுவனர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
கடந்த வாரம் கோவையில் பிரமாண்டமான முறையில் WJUT யின் தேர்தல் நடைபெற்று மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஆர். எஸ்.பாரதியை கண்டித்து கோவையில் கடந்த சனிக்கிழமை பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம்மும், சிவகாசியில் (குமுதம் ரிப்போர்ட்டர்) செய்தியாளர் கார்த்தியை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கலந்து கொண்டனர்.
பிறகு மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார் ஆகியோர் தலைமையில் வின்டிவி நிறுவனர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், கீழ்க்கண்ட மாநில மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திரு.லட்சுமி்ராசாராம்
திரு.ரங்கபாஷ்யம்
திரு.முன்னா
திரு.வல்லரசு செங்குட்டுவன்
திரு.ரமேஷ்
திருமதி.மேரி
திருமதி. தில்ஷாத்
திரு.சுவாமிநாதன்
திரு.சுபாஷ் கண்ணன்
திரு.புரசை பிரதீப்
திரு.அருள்நாதன்
திருமதி.ரூபா
திரு.சாலமன் ராசா
திரு.விஜயரமணன்
திரு.ஜேம்ஸ்
அனைவருக்கும் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்கள், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இவன்:
ஜெ.அஸ்கர்,
மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்!
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்.




You must be logged in to post a comment.