18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இலவச சுற்றுலா அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்:

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இலவச சுற்றுலா அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்:

எழுதியவர்: mohan March 4, 2020, 2:02 pm

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தொடர்ச்சியாக நிகழ்வுகளை முன்னெடுக்கும் முன்னாள் மாணவர்கள்.இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்.ஒரு நாள் சுற்றுலாவாக கன்னியாகுமரி அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.இந்த சுற்றுலா நிகழ்வில் திற்பிறப்பு நீர் வீழ்ச்சி, தொட்டி பாலம், பத்மநாதபுரம் அரண்மணை, கன்னியாகுமரி கடல் பகுதிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.இந்த சுற்றுலாவின் செலவுகளை முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சுற்றுலாவில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், பகுர்தீன், அப்பாஸ் , கேசர்கான், ஜெயக்குமார் , ஹனிபா, மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட கவுன்சிலர் ஆசிரியர் பாதுஷா, தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சசிக்குமார் கூறியதாவது: அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடச்சியாக எங்களது பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமெனவும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பகுர்தீன் கூறியதாவது:

அரசுப்பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை சரி செய்து வருகிறோம், மேலும் ஆசிரியர்கள் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள் என்றார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறுகையில்,

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி இந்த ஊரின் அடையாளமாக திகழ்கின்றது. ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது முன்னோர்கள் இங்கு தான் கல்வி பயின்று வந்துள்ளார்கள். தற்பொழுது மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி எங்களது பள்ளியின் பெருமையை மீட்போம் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!