17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை காவல்துறை சார்பில் தலைக்கவசம்,சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கோட்டை காவல்துறை சார்பில் தலைக்கவசம்,சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan March 4, 2020, 1:42 pm

தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் செங்கோட்டை காவல்துறையினர் ஏற்படுத்தினர்.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் உதவி ஆய்வாளர்கள் ஷியாம் சுந்தர் மற்றும் திரு.கோபால், வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், மேலும் பெரும் ஆபத்துகளிலிருந்து தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் நம்மை பாதுகாக்கும் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் இரு நபர்கள் தான் செல்ல வேண்டும் எனவும், மிதவேகம் மிக நன்று எனவே சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா பயணமாக தங்களின் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து அறிந்து கொண்டு பயன் பெற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!