ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியருக்கு இடைநிலைக்கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதங்களாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தற்காப்பு கலை பயிற்று நர் பி.கண்ணன் பயிற்சி அளித்தார். பயிற்சி நிறைவு நாளில் மாணவியர் கற்றுக்கொண்ட தற்காப்பு சாகசங்களை பள்ளி தலைமை ஆசிரியர் தெ. செல்வக்குமார் தலைமையில் செய்து காட்டினர். ஆசிரியர்கள் ஜி.கனகராஜ், பி.விமலா மெர்ஸி, பி.செல்வக்குமார், பள்ளி மேலாண் குழு உறுப்பினர் பி.செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.
வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி
எழுதியவர்: mohan March 4, 2020, 1:36 pm




You must be logged in to post a comment.