18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குந்துகால் துறைமுகம் பகுதிகளில் மண்அரிப்பை தடுக்க தடுப்புசுவர் அமைப்பதற்கு மக்கள்பாதை வலியுறுத்தல்.

குந்துகால் துறைமுகம் பகுதிகளில் மண்அரிப்பை தடுக்க தடுப்புசுவர் அமைப்பதற்கு மக்கள்பாதை வலியுறுத்தல்.

எழுதியவர்: mohan March 2, 2020, 6:32 pm

மக்கள்பாதையின் திட்ட விளக்கம் மற்றும் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாம்பன் ஊராட்சியின் குந்துகால் குழந்தையேசுநகரில் நடைபெற்றது, இக் கூட்டத்திற்கு மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு கிராம முக்கியஸ்தர் ஜான்போஸ் ஆகியோர் தலைமை தாங்னார்கள், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்கபூர் முன்னிலை வகித்தார், தங்கச்சிமடம் பொறுப்பாளர் அந்தோணிதினா வரவேற்றார்,

மக்கள்பாதை திட்டங்கள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை துணை ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின், கிராமசபை குறித்து இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், தமிழுக்கும் அமுதென்று பேர் குறித்து இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை நீதி திட்ட பொறுப்பாளர் சந்திரசேகர், சமுகசெயற்பாட்டாளர் முத்துவாப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினர், இப்பகுதி மீனவர்களும், பெண்களும் கலந்து கொண்டு தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை செய்ய வாழ்கின்ற இப்பகுதியில் பெரிய மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பெற்று வருகின்றது, துறைமுகம் பணிகள் நடைபெற்றுவரும் வேலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மண்அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இவற்றை தடுக்கும் பொருட்டு தடுப்புசுவர் அமைக்க மக்கள்பாதை இயக்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஒன்றியக்குழுவை வழுப்படுத்த இணைத்த செயல்பாடுகளை மக்களுடன் இணைந்து முன்னெடுக்க முடிவு செய்யப்பட்து, இதில் அருள், தினேஷ், ராமசாமி, பிரதீப், அலோசியஸ், ராஜேந்திரன், வெங்கடேஷ் உட்பட மீனவர்களும், மீனவபெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் வீரக்குமார் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!