17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் மயமாகும் குடிநீர் விநியோகம். ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தனியார் மயமாகும் குடிநீர் விநியோகம். ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

எழுதியவர்: mohan March 2, 2020, 6:22 pm

ராமேஸ்வரம் நகராட்சி யில் 21 வார்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம்  குடிநீர் வழங்கி வந்தது. குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியாக , நகரில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்புமின்றி அகற்றி வருகிறது. தனியார் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு, சில ஆண்டுகளில் தனியாரிடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என தெரிய வருகிறது. பொது குடிநீர் குழாய்களை இணைப்பை ரத்து செய்ததை கண்டித்தும், அதே இடங்களில் மீண்டும் பொது குடிநீர் குழாய் நிறுவ வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் இந்திய கம்யூ., கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது . தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமை வகித்தார் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் முன்னிலை வகித்தார், மாவட்ட குழு உறுப்பினர் பி.வடகொரியா, தாலுகா பொருளாளர் என்.ரமணி,தாலுகா குழு உறுப்பினர்கள் என்.ஜே.மோகன்தாஸ் எம்பிச்சை, எம்.செந்தில், பி.தினேஷ்குமார், பி.ஜோதிபாசு, பி.ஜீவானந்தம் , ஜி.பாண்டி, எம்.தனவேல்கிளை செயலாளர்கள் ஜி.ஆதிதன்கோமஸ், ஏ.ராமு, கே.நாகேஸ்வரன், எம்.சுகுமார், எஸ்.ராஜா, சுரேன், மாடசாமி பாபு ஆல்பர்ட்ராஜ், ரூபன், காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் ராமகிருஷ்ணன் மற்றும் ராமர் தீர்த்தம் தெற்கு, காமராஜர் நகர் , சௌந்தரியம்மன் கோயில் தெரு பெண்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!