17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நாக் குழுவினர் ஆய்வு  நிறைவு

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நாக் குழுவினர் ஆய்வு  நிறைவு

எழுதியவர்: mohan March 2, 2020, 5:52 pm

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பீகார் மாநில பாட்னா பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் முனைவர் டோலி சின்கா  தலைமையிலும், ராஜ்கோட் சௌராஷ்டிரா பல்கலைக்கழக பேராசிரியர் தக் ஷா பிரதாப் சிங் சௌகான், ஆய்வுக்குழு உறுப்பினர் ஆலப்புழா அலூசியஸ் கல்லூரி முதல்வர் முனைவர்  அனியன், ஆகியோர்கள் முன்னிலையில் நாக் குழுவினர் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மலர் வரவேற்று பேசினார்.

         இந்த ஆய்வின் போது நிலக்கோட்டை அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகல்வித்திறன் குறித்தும், பாடத்திட்டம் , கற்பித்தல், கற்றல் மதிப்பீடு , ஆசிரியர் ஆய்வுத் திறன், உள்கட்டமைப்பு வசதி, மாணவியர் உயர் கல்வி முன்னேற்றம், மாணவியர் தலைமை பண்பு மற்றும் கல்லூரியின் சிறந்த நடைமுறைகள் ஆகிய 7 தலைப்பின்கீழ் குழுவினர் ஆய்வு செய்தனர்.      இந்த ஆய்வின் போது கல்லூரியின் நாக் ஒருங்கிணைப்பாளர் . ஜெயப்பிரதா, கல்லூரிப் பேராசிரியர்கள் சின்னச்சாமி, முருகவேல் , செல்வன் , லதா , கந்தசாமி , மணிகண்டராஜா, இக்பால், சுந்தரலிங்கம், சீனிவாசன், ராஜசேகர் , சுப்பம்மாள், அமுதா , மாயாண்டி, கார்த்திகேயன் , நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!