17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

இராமநாதபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

எழுதியவர்: mohan March 2, 2020, 11:26 am

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் மகளிர் விழா நடந்தது. அக்குஹீலர் கவிதா விஸ்வ நாதன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க தலைவி கவிதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சீதாலெட்சுமி சந்திரசேகரன் வரவேற்றார். தமிழிசை . ஷிவானி அக்ஷதா, தரணி போற்றும் பரணி இளமதி பானுகோபன், பண்ணும் பரதமும் – டாக்டர் கனகப்பிரியா பால்ராஜ், குறளமுதம் – மழலை மிரா ரஞ்சன், எட்டுத்தொகையில் ஏற்றமிகு மகளிர் – ஜெய்நபி ஜபருல்லா கான், நாட்டார் பாடலும் நடனமும் – அரசு குழந்தைகள் காப்பக மாணவியர் நடன நிகழ்ச்சி நடந்தது.பாவையரின் பன்முகப் பார்வை என்ற தலைப்பில் தமிழரசி உதயகுமார், தமிழரசி மதியழகன், விஜி கருணாநிதி, உமா மகேஸ்வரி மாரிமுத்து, கீதா ரமேஷ், பரமேஸ்வரி தமிழ்வாணன் ஆகியோர் கலந்துரையாடினார்.புதுமைப் பெண்களடி , பூமிக்குக் கண்களடி என்ற தலைப்பில் கலைவாணி பேசினர்.

மகளிர் அணித்தலைவி ,டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ், கஸ்தூரி முருகேசன், காளீஸ்வரி சுகுமார், கௌசல்யா ஜெகநாதன், லதா சேஷாத்ரி, சித்ரா வணங்காமுடி ஆகியோர் பாடல்கள் பாடினர். ஆடலும் பாடலும் மகேஸ்வரி தங்கப்பாண்டியன், எம்.எஸ்.கே . ஹரிதா ராகேஷ்குமார், பெண்மை போற்றுதும் – சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அறிவுத் தேடல் குறித்து தஹ்மிதா பானு பேசினார். மங்களேஸ்வரி மங்களசுந்தரமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பரமேஸ்வரி தமிழ்வாணன், இளமதி பானுகோபன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!