17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » +2 தேர்வு தொடக்கம்..தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

+2 தேர்வு தொடக்கம்..தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2020, 10:32 am

தமிழகத்தில் +2 தேர்வு இன்று (02/03/2020) தொடங்கியது.  இதில் 7082 மேல் நிலை பள்ளிகளில் இருந்து 4,60,006 மாணவர்கள், 4,01,101 மாணவிகள் மற்றும் பிற என மொத்தம் 8,87,992 பேர் இத்தேர்வை எதிர்கொள்கிறார்கள்.

இதையொட்டி கீழக்கரையில் இஸ்லாமியா பள்ளி போன்ற முக்கிய பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் தொடங்கியது. இது சம்பந்தமாக இஸ்லாமியா பள்ளி தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இபுராகிம் கூறுகையில், “இப்பரிட்சை எழுதும் மாணவ, மாணவிகள் வெற்றி வாகை சூட பள்ளி நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கினோம். மேலும் பள்ளி வளாகத்தில் தேர்வு எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது, அரசாங்கம் சார்பாகவும் பாதுகாப்புகள் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இத்தருணத்தில் கீழை நியூஸ் நிர்வாகம் தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!