28 . 02 . 2020 அன்று இரவு மதுரை , கரிமேடு மீன் மார்க்கெட்டில்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு விற்கப்பட்ட மீன்களில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் தரம் குறைவாகவும் கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டது . இத்தகைய கெட்டுப்போன மீன்கள் இரண்டு டன் அளவில் உணவு பாதுகாப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து , தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் தரத்தினை உறுதி செய்திடவும் தரம் குறைவான மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மாநிலம் முழுவதும் உள்ள மீன்துறை அதிகாரிகளுக்கு மீன்துறை இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . மேலும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்துறை அதிகாரிகள் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்கள் மற்றும் மீன் பொருட்களின் தரத்தினை தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டிட அறிவுறுத்தப்பட்டுள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.