18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர் எஸ் பாரதியை கண்டித்து “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்” நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்..!

ஆர் எஸ் பாரதியை கண்டித்து “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்” நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்..!

எழுதியவர்: Askar February 29, 2020, 5:58 pm

“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” சார்பாக பத்திரிக்கையாளரை கொச்சைப்படுத்தி பேசிய திமுகவின் ஆர்எஸ் பாரதியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் அ.ஜெ. சகாயராஜ், தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் கோவை.பிரதீப்குமார், பொருளாளர் டி.இளையாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நமது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் ஆர்எஸ் பாரதியை கண்டித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் உட்பட பல மூத்த நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றினார்கள்.மேலும் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய ஆர்எஸ்பாரதியை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன .இதில் சென்னை, திருச்சி திண்டுக்கல், சேலம் ,ஈரோடு ,திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!