இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசூரில் மலைப்பாம்பு உலாவுவதாக திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கடைத்தது. இதன்படி நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசூர் விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரசூர் சொக்கலிங்கம் என்பவரது லாரிக்கு அடியில் இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து
வனப்பகுதிக்குள் மீண்டும் விட்டனர். திருவாடானை சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பாம்பு பிடிபட்டது இதுவே முதல் முறை. இது குறித்து விசாரித்த போது சொக்கலிங்கம் என்பவர் லாரியில் எம் சாண்ட் மணல் கரூரிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மேலூர் அருகே மலம்பட்டியில் லாரியை நேற்று இர நிறுத்தி விட்டு டிரைவர் தூங்கினார். பொழுது விடிந்ததும் அரசூர் திரும்பிய லாரி டயர்களை தட்டிப் பார்த்த போது இந்த மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருவாடானை தீ மற்றும் மீட்பு படையினருக்கு தெரிவித்தாக சொல்லப்பகிறது. மேலூர் பகுதியில் லாரி நிறுத்தியபோது, இந்த பாம்பு ஏறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அங்கிருந்து லாரியில் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
திருவாடானை அருகே வனத்துறையினரிடம் பிடிபட்ட மலைப்பாம்பு
எழுதியவர்: mohan February 29, 2020, 6:38 pm




You must be logged in to post a comment.