18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வீரியத்துடன் நடைபெற்று வரும் மாபெரும் தர்ணா போராட்டம்..

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வீரியத்துடன் நடைபெற்று வரும் மாபெரும் தர்ணா போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 29, 2020, 12:24 pm

தமிழகம் முழுவதும் 500கும் மேற்பட்ட இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாரபாக குடியுரிமை சட்டத்தை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளைகள் சார்பில் இன்று (29/02/2020( காலை 10:00 மணியளவில் B H பஜாரில் இருந்து வள்ளல் சீதக்காதி சந்து மற்றும் வடக்குத்தெரு  டாக்டர் ஜவாகிர் உசேன் JH மருத்துவமனை வரை பொது மக்கள் அலைகடலென திரண்டு மாபெரும் தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 70 நாட்களுக்கு மேலாக CAA, NRC, NPR க்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை மத்திய பாஜக அரசு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதில் சுமார் 42க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதை கண்டித்தும். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சுமர் 2000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்ணாவில் கலந்து கொண்டு காவல்துறை மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையில் கீழக்கரை ஆய்வாளர் பிச்சைமணி மற்றும் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கீழக்கரை செய்தியாளர்:- எஸ்.கே.வி.சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!