17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-கலெக்டர் விரட்டி பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

வேலூரில் ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-கலெக்டர் விரட்டி பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

எழுதியவர்: mohan February 29, 2020, 11:35 am

வேலூர் மாவட்டம் இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரஞ்ஜித் குமார் தன்னுடைய நில பத்திரத்தை விடுவிக்க வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனி துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன் ரூ 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.. இது குறித்து ரஞ்சித் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்களின் ஆலோசனைப்படி அவரது அலுலகம் அருகில் காரில் இருந்த தினகரன் லஞ்ச பணத்தை வாங்கி கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைக்க முயற்சி செய்த போதுடிரைவர் ரமேஷ் காரை வேகமாக ஓட்டினார். விரட்டி சென்ற போலீசார் தினகரன், ரமேஷை கைது செய்தனர். மேலும் தினகரனிடமிருந்து கணக்கில் வராத ரூ 1 லட்சத்து 86 ஆயிரத்தை கைப்பற்றினர்.தினகரன் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்தபின்பும் மாறுதல் ஆகாமல் லஞ்ச பணத்தை வாங்கி கொண்டு போய் விடலாம் என்று நினைத்த தினகரனுக்கு வேலூர் மத்திய சிறையில் அடைக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!