18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரூராட்சி அலுவலகத்தை வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக திமுகவினர் முற்றுகை போலீசார் சமரசம்

பேரூராட்சி அலுவலகத்தை வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக திமுகவினர் முற்றுகை போலீசார் சமரசம்

எழுதியவர்: mohan February 28, 2020, 7:07 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் தற்போது சுமார் 17,500 வாக்காளர்கள் இடம் பெற்று 15-வார்டு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இந்த வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் 26.02.2020 தேதி நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலை பார்த்த திமுகவினர் வார்டுகளில் முறைகேடு நடந்திருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நேற்று நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை திமுக ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன் ஆகியோர்கள் தலைமையிலும் நிலக்கோட்டை நகரச் செயலாளர் கதிரேசன் முன்னிலையிலும் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி இடம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருக்கிறது என தெரிவித்து அதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி முறையாகத்தான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக திமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இத்தகவல் உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரனுக்கு தெரிவிக்கப்பட்டது உடனடியாக பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோர்கள் தலைமையில் போலீசார் விரைந்து வந்து திமுகவினர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையையும், தற்போது முறைகேடாக வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலின் முழுமையான விவரத்தையும் அறிக்கையாக கொடுக்கும்படி கேட்டனர். இதுகுறித்து முறையாக  அறிக்கை வழங்குவதாக நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தெரிவித்தார். இதனைக் கூறி நிலக்கோட்டை போலீசார் திமுகவினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கூறியதாவது: தற்போது வெளியிட்டுள்ள நிலக்கோட்டை பேரூராட்சி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது இதன் அறிக்கையை பெற்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடருவோம் என கூறினார். போராட்டத்தின்போது ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, திமுக நகர நிர்வாகிகள் ஜோசப் , மணி, முருகேசன், உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!