18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

எழுதியவர்: mohan February 28, 2020, 6:58 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே புல்லக்காடு பட்டியைச் சேர்ந்த ராஜா (எ ) யோகராஜ்  24. விவசாய வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த நந்தினி வயது 24. என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நந்தினிக்கு ஒற்றைத்தலைவலி இருந்ததாக கூறப்படுகிறது. இது பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் தலைவலி குறையாததால் மனவேதனையில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை கடந்த 21.02.2020 தேதியன்று எடுத்துக் குடித்தாக கூறப்படுகிறது.இதை அறிந்த அக்கம். பக்கத்தினர் உடனடியாக நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 27.02.2020 பரிதாபமாக செத்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகள் தான் ஆவதால் இதுகுறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா விசாரணை செய்து வருகிறார்.

நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!