17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் ரோட்டராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா

ராமநாதபுரம் ரோட்டராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா

எழுதியவர்: mohan February 28, 2020, 5:17 pm

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ரோட்ராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ரோட்டரி கவர்னர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி, சோ.பா. ரங்கநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்ராக்ட் சங்கத் தலைவராக மாணவர் இஜாஸ் அகமத் பதவி ஏற்றுக்கொண்டார்.

சமூக சேவையில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் செயலர் மார்னிங்ஸ்டார் கே. செந்தில்குமார் பேசினார். ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் உறுப்பினர்கள், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் ராயல்ஸ் உறுப்பினர்கள், ரோட்டரி கிளப் ஆப் பரமக்குடி உறுப்பினர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜசேகர் செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!