18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா விழிப்புணர்வு பேரணி

சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: mohan February 28, 2020, 5:04 pm

இராமநாதபுரம் அருகே சாத்தன்குளம், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுஅறிவியலில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் பேரணியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் சர். சி. இராமன் முகமூடி மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் சர்.சி. வி. ராமன் முகமூடி அணிந்து “அறிவியலில் பெண்கள்” தலைப்பில் பேரணி நடத்தினர். 6 வகுப்பு முதல் 9 வகுப்புமாணவ மாணவியர், ஆசிரியர்கள் திருமூர்த்தி, சாம்ராஜ், நிஷா, சாந்தி, செந்தில் வடிவேலன், ஜெரோம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் நிறைவாக, மாணவ,மாணவியர் அனைவரும் தேசிய அறிவியல் தின உறுதிமொழி ஏற்று கொண்டனர். மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு எற்படுத்தும் பொருட்டு,ஐசக் நியூட்டன் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் செந்தில் வடிவேல் மாணவர்களுக்கு அறிவியல் வினாடி வினா நடந்தது.பரிசளிப்பு விழாவிற்கு ஆசிரியர் திருமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆசிரியை நிஷா, ஆசிரியர் சாம்ராஜ் பேசினர். அறிவியல் வினாடி வினா போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் புனித ராணி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!