18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

இராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

எழுதியவர்: mohan February 28, 2020, 4:47 pm

இராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு ரோட்டரி கிளப் ஆப் நாட் சார்பில் தலைவர் நாகராஜன் தலைமையில் செயலர் மார்னிங்ஸ்டார் செந்தில்குமார் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறந்து விளங்கியமைக்காக ஐனாதிபதி விருது பெற்ற ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லஞ்சம் ஒழிக்க ரோட்டரி, தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என சிறப்புரையாற்றினார். இதில் இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா, வழக்கறிஞர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!