17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு இராமநாதபுரம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு இராமநாதபுரம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2020, 11:54 am

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு இராமநாதபுரம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் 27/02/2020 அன்று மாலை 3.00 மணியளவில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் Dr. A.R. நாதிரா பானு கமால்  சட்டம் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் உடனடியாக தீர்வு வழங்கப்படுவதாகவும் கூறி தலைமை உரையாற்றினார். திருமதி.O.உஷா தேவி, வழக்கறிஞர் இராமநாதபுரம், ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இருப்பதே மகளிர் தின சிறப்பு என்றும், பெண் சட்டத்தை தெரிந்துக் கொள்ளுதல் அவசியம் என எடுத்துரைத்தார். திரு.R. சலீம், வழக்கறிஞர், இராமநாதபுரம், பெண்களின் சொத்து உரிமையைப் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் திரு.S.தங்கராஜ், செயலாளர்(சார்பு நீதிபதி), மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இராமநாதபுரம், சட்ட உரிமைகள் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் விளக்கி சிறப்புரையாற்றினார். திரு.J.F.பிலோமின், முதுநிலை நிர்வாக உதவியாளர் அவர்கள் ஆணைக்குழுவின் பணிகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!