18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பள்ளி மணவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி துவக்க விழா..!

பள்ளி மணவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி துவக்க விழா..!

எழுதியவர்: Askar February 27, 2020, 7:26 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஏரிமலை மற்றும் கோட்டூர் மலை அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கைத்தொழில் பயிற்சி நிகழ்ச்சியினை பேவுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது மட்டுமல்லாமல் மாணவர்கள் எதிர்கால வளர்ச்சிக்காக அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி அளிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு தையல் பயிற்சி யோகா பயிற்சி ஓவிய பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது தருமபுரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 50 மாணவிகளுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகேஸ்வரி மாவட்ட கல்வி அலுவலர்கள்  பாலசுப்பிரமணியன், சண்முகவேல் ,பொன்முடி   ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார் தமிழாசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!