17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே தமிழக அரசால் மூடப்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் சுமார் 14 காட்டு யானைகள் முகாம்

காட்பாடி அருகே தமிழக அரசால் மூடப்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் சுமார் 14 காட்டு யானைகள் முகாம்

எழுதியவர்: mohan February 27, 2020, 7:18 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தமிழக அரசால் மூடப்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில்  தொழிற்சாலையின் கேட் மற்றும் மதில் சுவரை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள குட்டையில் நீர் அருந்திவிட்டு காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன.காட்பாடி நகர் பகுதிக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் உடனடியாக வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பலமநேர் காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய இரண்டு குட்டி யானைகள் உட்பட 14 காட்டுயானைகள் குடியாத்தம் பகுதிக்கு வரும் பொழுது அங்கிருந்து துரத்தப்பட்டு வழிதவறி 14 யானைகள் கொண்ட கூட்டம் கடந்த 20 நாட்களாக ஆந்திர பகுதிக்கும் தமிழக எல்லை காட்டுப்பகுதிக்கு மாறி மாறி முகாமிட்டு வருகிறது.20 பேர் கொண்ட வன ஊழியர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து காட்டு பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!