18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை காக்க வைத்து ஜெபம் செய்த செவிலியர்கள்.

பணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை காக்க வைத்து ஜெபம் செய்த செவிலியர்கள்.

எழுதியவர்: mohan February 27, 2020, 6:41 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு குழந்தைகளே அதிகம் வைத்தியத்திற்காக வந்து செல்வா். இந்நிலையில் அரசு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் விஜயா, சங்கீதா ஆகிய இருவரும் பணி நேரத்தில் நோயாளிகளை காக்க வைத்து ஊசி போடும் அறையில் கிறிஸ்துவ மதபோதகா் ஒருவரிடம் இருவரும் ஜெபம் செய்து பிராத்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனைக்கு உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த விருமன் என்பவர் தனது மகனுக்கு ஊசி போட சென்ற நிலையில் நோயாளிகளை காக்க வைத்து செவிலியர்கள் பிராத்தனையில் ஈடுபட்டதை பார்த்து அதிர்த்சியடைந்தார். உடனே அவரது செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டார். அந்த தகவல் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.அரசு நகராட்சி மருத்துவமனையில் செவிலியர்கள் மத ரீதியாக பிராத்தனையில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!