17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பாக சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பாக சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 27, 2020, 5:48 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பாக சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி 26/02/2020 அன்று காலை 11.00 மணியளவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் A. நோமான் அக்ரம் UNV மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நேரு யுவகேந்திரா இராமநாதபுரம் அவர்கள் மாணவர்களிடம் நற்பணி மன்றத்தின் சிறப்பை கூறியும் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிரா பானு கமால்  மாணவிகளிடம் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வை அறிந்து தலைமைத்துவம் பெற வேண்டும் என்று கூறி தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. M.K.J. ரகுபதி ராஜா நித்யா, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்று எடுத்துரைத்தார். து. துரைமுருகன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இராமநாதபுரம் மாணவிகளிடம் பெண்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்றும் தவறான பாதையில் எண்ணத்தை செல்லாமல் தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி மாணவிகள் இளையோர் பாராளுமன்றத்தை பற்றி பேசினார்கள். இந்நிகழ்வை இளைஞர் நற்பணி மன்றம், கல்லூரி யூத் ரெட் கிராஸ், ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!