17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய வாக்காளர் விண்ணப்பப் படிவம் பயிற்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய வாக்காளர் விண்ணப்பப் படிவம் பயிற்சி

எழுதியவர்: mohan February 27, 2020, 5:06 pm

இராமநாதபுரம் அருகே , சாத்தன்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி வாக்காளர் கல்வி குழு சார்பில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு வாக்காளர் விண்ணப்பப் படிவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளியில் வாக்காளர் கல்வி குழு கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்தல் ஆணையம், மாதிரி வாக்குபதிவு, மின்னணு வாக்குபதிவு இயந்திரம், வாக்காளர் தினம் மற்றும் வாக்காளர் பட்டியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பயிற்சியை தலைமை ஆசிரியர் செல்வராஜ்தொடங்கி வைத்தார். வாக்காளர் கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் வடிவேலன் மாணவர்களுக்கு படிவம் 6 குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் (படிவம் 6) புதிய வாக்காளர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பினர். இணைப்பு ஆவணங்கள் வயது சான்றிதழ், புகைப்படம், இருப்பிட முகவரி சான்றிதழ் பற்றிய மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பூர்த்தி செய்த படிவங்களை வட்டார அலுவலர் ஒப்படைத்து, ஒப்புகை சீட்டு பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.பயிற்சியாளர் ஆசிரியர் ஜெரோம் இணையத்தில் புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தார். செல்போனில் (voter helpline) வாக்காளர் உதவி மையம் ஆப் பதிவிறக்கம் செய்வது, அதில் எவ்வாறு பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்வது, ஆவணங்களை பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது உதவி தலைமை ஆசிரியர் சுவாமி தாஸ் பேசிய போது மாணவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பிய உடன் புதிய வாக்காளர் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு நடைபெறும். நேரிலோ அல்லது செல்போன் ஆப் மூலம் பெயரை பதிவு செய்யலாம். வாக்கு அளிப்பது நமது ஜனநாயக கடமை. வாக்கு அளிப்பதற்கு ஒரு போதும் பணம் வாங்க கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.பயிற்சியின் நிறைவாக, மாணவ மாணவியர் அனைவரும் வாக்களிப்பது கடமை, வாக்கு வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர் ஜெரோம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!