17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் கட்சி வழங்கியது..!

டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் கட்சி வழங்கியது..!

எழுதியவர்: Askar February 27, 2020, 2:04 pm

டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அளித்தனர்.

டெல்லியில் சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. டெல்லி கலவரம் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டது. டெல்லி கலவரத்தை கண்டித்தும், மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைதியை கண்டித்தும் இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது பேட்டியில், டெல்லி வன்முறை கவலையளிக்கிறது, இது ஒரு அரசியல் சூழ்ச்சி. அரசியல் லாபத்திற்காக வேண்டும் என்றே பாஜக இப்படி செய்கிறது. டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இந்தியாவின் மிக மோசமான உள்துறை அமைச்சர் என்று நிரூபித்துள்ளார்.

நடக்கும் விஷயங்களை பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், என்றார். இந்த நிலையில் டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அளித்தனர்.

இந்த தீர்மானத்தில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் என்ன நடந்தது என்பதை மொத்தமாக விளக்கி இருக்கிறார்கள். டெல்லியில் எப்படி வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. எப்படி 34 பேர் பலியானார்கள், கலவரம் எப்படி உண்டானது, 200 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தது எப்படி என்று விரிவாக விளக்கி இருக்கிறார்கள். மத்திய அரசின் மோசமான தோல்வி இது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, 4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடின, மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன, என்று குறிப்பிட்டார். அதேபோல் தலைநகரில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும், டெல்லி அரசும் பொறுப்போடு செயல்பட வேண்டும். மத்திய அரசோடு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!