17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே நடுப் பட்டியில் மாட்டு பண்ணையில் தீ விபத்து. 19 மாடுகள் தீயில் கருகியது.

உசிலம்பட்டி அருகே நடுப் பட்டியில் மாட்டு பண்ணையில் தீ விபத்து. 19 மாடுகள் தீயில் கருகியது.

எழுதியவர்: mohan February 27, 2020, 1:56 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி செட்டியப்பட்டி அருகே நடுப்பட்டியில் மாட்டுப் பண்ணை நடத்தி வருபவர் மனோகரன்(45). இவர் பண்ணையில் ஆடுகள் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். காலையில் மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்த பாண்டி (40) மோட்டார் போட்டு விட்டு பின் தோட்டத்தில் வேலை பார்க்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மாட்டுப் பண்ணையில் இருந்த தவிடு மற்றும் மாடுகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் கார் உள்பட அனைத்தும் தீயில் எரிந்து கொண்டு இருந்தது.

சம்வமறிந்த நடுப்பட்டி பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைத்து பார்த்துள்ளனர்.முடியாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்புத் துறையினர்சுப்புராஜ் தலைமையில் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.இதில் 19 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானது.மேலும் பல மாடுகள் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றன.சம்பவமறிந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா வட்டாட்சியர் செந்தாமரை மற்றும் காவல்துறையினர் வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!