17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே கீழப்புலியூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி- ரயில்வே போலீசார் தீவிர விசாரணை..

தென்காசி அருகே கீழப்புலியூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி- ரயில்வே போலீசார் தீவிர விசாரணை..

எழுதியவர்: mohan February 27, 2020, 1:25 pm

தென்காசி அருகே கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியானவர் யார்? என்பது குறித்து தென்காசி ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலியிலிருந்து நேற்று புதன்கிழமை மதியம் 1.50 மணியளவில் செங்கோட்டைக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை 3. 40 மணிக்கு கீழப்புலியூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்நிலையில் அந்த ரயில் கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தென்காசி நோக்கி சென்ற நிலையில் ரயிலில் அடிபட்ட நிலையில் தண்டவாளத்தில் ஒருவர் கிடந்துள்ளார். இதுபற்றி உடனடியாக தென்காசி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த தென்காசி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜாண் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர் அப்போது தண்டவாளத்தில் உயிரற்ற நிலையில் ஆண் உடல் கிடந்தது. ரயிலில் அடிபட்டு இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம். அவரது தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறியுள்ளது. அவரது வலது கை துண்டாகி உள்ளது.உடனடியாக தென்காசி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான் மற்றும் போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது அதில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்து அடிபட்டு இறந்தாரா? என்கிற கோணத்தில் தென்காசி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் அடிபட்டு இறந்தவர் யார் என்று அடையாளம் தெரிந்தால் உடனடியாக தென்காசி ரயில்வே காவல் நிலையம் தொலைபேசி எண் : 9498101997, 9597310502 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தென்காசி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜாண் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!