17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் உட்பட நான்கு நபர்கள் கைது

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் உட்பட நான்கு நபர்கள் கைது

எழுதியவர்: mohan February 27, 2020, 11:40 am

திருப்பரங்குன்றம் மகளிர் ஊர் நல அலுவலர் யோகம்மாள் அவர்கள் மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கொடுத்த புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்து சம்பவ இடமான சுப்பிரமணியபுரம் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. எனவே சிறுமியை திருமணம் செய்த முத்துக்குமார், முத்துக்குமார் தாயார் கவிதா சிறுமியின் தந்தை கதிரேசன் சிறுமியின் தாயார் கருப்பாயி ஆகிய நான்கு நபர்களையும் ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி அவர்கள் கைது செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!