18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு- மாற்றுப் பாதையில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை…

தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு- மாற்றுப் பாதையில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை…

எழுதியவர்: mohan February 26, 2020, 10:25 am

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நான்குவழி மற்றும் எட்டு வழிச் சாலைகள் அரசால் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வரை கேரளா செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு முதலே பல்வேறு பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.குறிப்பாக விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால் விவசாயிகள் இத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வந்த நிலையில் 25.02.20 பிற்பகல் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர், திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனாவிடம் கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!