18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லியில் மசூதியின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல்-சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!!

டெல்லியில் மசூதியின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல்-சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!!

எழுதியவர்: Askar February 25, 2020, 10:20 pm

டெல்லியில் மசூதியின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல்-சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!!

தலைநகர் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறையில் மசூதி மீது தீ வைத்ததோடு, மசூதியை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர் வன்முறையாளர்கள்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை சட்ட ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.

இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வன்முறையாளர்கள் மசூதி மீது தீ வைத்துள்ளது, மேலும் மசூதி மினாராவை இடித்து,ஒலி பெருக்கியையும் தூக்கி வீசுவதோடு, இந்துத்வா கொடியை மசூதியில் ஏந்தி நிற்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் டெல்லியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிகழ்வு முன்பே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!