டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்டிபிஐ., மாவட்ட செயலர் பைரோஸ் கான் (ஒன்றிய கவுன்சிலர்) தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்
சுலைமான், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட துணை தலைவர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் சகுபர் சாதிக் வரவேற்றார். நகர் பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராகவும், டில்லி போலீசாருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் அப்துர் ரஹ்மான், எஸ்டிபிஐ., மாவட்ட பேச்சாளர் அப்துல் ஜமீல் (நகர் தலைவர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மல் ஷரீப் ஆகியோர் பேசினர். தேவிபட்டினம் எஸ்டிபிஐ., நகர் தலைவர் அலாவுதீன் நன்றி கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசீன், எஸ்டிபிஐ., மாவட்ட துணை தலைவர் சோமு,தமுமுக நகர் தலைவர் சுலைமான், மருத்துவ அணி பொறுப்பாளர் யாசர் அராபத்
உள்பட பலர் கண்டனர்.
டில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan February 25, 2020, 7:26 pm




You must be logged in to post a comment.