17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

நிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

எழுதியவர்: mohan February 25, 2020, 4:37 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எச். என். யூ.பி. ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து நாடார் உறவின்முறை தலைவர்  சுசீந்திரன் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.       விழாவிற்கு பள்ளிச் செயலர் சதீஷ்குமார் முன்னிலை, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர்  யாகப்பன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்.

      பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் அதிகளவு மாணவர்கள் நீட் தேர்வை கண்டு பயந்து கொண்டிருக்கின்றார்கள். அதைப்பற்றி இனிமேல் கல்வி கற்கும் மாணவர்கள் பயப்பட வேண்டாம். நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளும் தற்போது ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டது. எனவே வருங்காலங்களில் மாணவர்கள் நம்பிக்கையோடு படித்து வாழ்க்கையில் வளர்ச்சி பெற பல்வேறு கல்வித் திட்டங்களை செய்து வருகிறது என பேசினார்.

      இவ்விழாவில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மூர்த்தி, என்னால் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன் , நிலக்கோட்டை  அதுபோல கூட்டுறவு கட்டிடசங்க தலைவர்  டி. ஆர்.எஸ்.செல்வகுமார், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சரவணகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!