18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..

நெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..

எழுதியவர்: mohan February 25, 2020, 4:24 pm

சிங்கை அருகே குளத்திற்கு குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் சிங்கை அருகே ஆறுமுகம்பட்டியை சேர்ந்தவர் தங்கையா (வயது 57). தனியார் மில் தொழிலாளியாக வேலை பார்த்த இவர் தற்போது பழைய ரே‌ஷன் கடை தெருவில் கை, கால் முறிவு மற்றும் சுளுக்குகளுக்கு வைத்தியம் பார்க்கும் நாட்டு வைத்தியராக இருந்து வந்தார்.இந்திலையில் மாலை குளத்தில் குளிக்க சென்றவர், துணிகளை துவைத்து வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது,குளத்தின் நடுபகுதியில் ஆழத்தில் தீடீர் என மூழ்கினார். குளிக்க சென்ற வரை காணவில்லை. இதையடுத்து அவர் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என கருதிய அவரது குடும்பத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்கள் வி.கே. புரம் போலீசார் மற்றும் அம்பை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் குளத்தில் இறங்கி தங்கையாவை தேடினர். எனினும் அவர் கிடைக்கவில்லை. இரவு வெகு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திய தீயணைப்பு நிலைய வீரர்கள் இன்று காலை தேடும் பணியில் ஈடுபடுவதாக கூறி சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் தங்கையாவை தேடுவதற்காக வந்தனர். அப்போது குளத்தின் கரையில் தங்கையாவின் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!