18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்

மார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan February 25, 2020, 1:28 pm

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மார்ச் ஒன்றாம் தேதி இராமநாதபுரம் வருகை தர உள்ளார். அவரை வரவேற்பது தொடர்பான அதிமுக., நிர்வாகிகள் யொட்டி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரத்தில் இன்று (25/02/2020) நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது குறித்து மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி , அதிமுக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தார். மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும என கேட்டுக்கொண்டார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் எஸ்.ராமசேது, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இன்ஜினியர் என்.ஆர்.பால்பாண்டியன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஏ.அர்ச்சுணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.தர்வேஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாமிநாதன்,டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ராபர்ட், ராமநாதபுரம் ஒன்றியச்செயலாளர் எம்.அசோக்குமார், ராமநாதபுரம் நகர் செயலாளர் எம்.அங்குச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லானி சீனிக்கட்டி, மண்டபம் நகர் செயலாளர் கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!