மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளான கட்டதேவன்பட்டி, எ.ராமநாதபுரம், கள்ளபட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் சுரக்காயை அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில்
தற்போது சீசன் தொடங்கி சுரக்காய் காய்க்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுரக்காய்களை விவசாயிகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் அறுவடை செய்யப்படும் சுரக்காய்களை உசிலம்பட்டி காய்கறி சந்தைக்கு எடுத்து சென்றால் விவசாயிகளிடம் வியாபாரிகள் 1கிலோ சுரக்காய் ரூ5க்கு ஏலம் எடுக்கின்றனர். இதனால் சுரக்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சுரக்காய் பயிருக்கு பயிரிடப்பட்டுள்ள செலவு பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 3மாதமாக சுரக்காய்க்கு போதிய விலை கிடைக்காதது தொடர்ந்து நீடித்து வருவதால் விவசாயிகள் என்ன செய்வது என திகைத்துவருகின்றனர். வியாபாரிகளால் பொதுமக்களுக்கு ரூ10க்கு விற்பனை செய்யப்;படுவது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .
எழுதியவர்: mohan February 25, 2020, 12:05 pm




You must be logged in to post a comment.