18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா..

நிலக்கோட்டையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா..

எழுதியவர்: Askar February 24, 2020, 9:01 pm

நிலக்கோட்டையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அதிமுக கட்சி உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான யாகப்பன் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரெஜினா பேகம் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கள் வழங்கினர்கள் .

திண்டுக்கல் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் MP. உதயகுமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய துணை தலைவர் நல்லதம்பி, நகர செயலாளர் சேகர், நிலக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, முன்னால் சேர்மன் மூர்த்தி, எத்திலோடு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, நிலக்கோட்டை கூட்டுறவு சங்க தலைவர் செந்தில், சேசுராஜ், முன்னால் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணி, பள்ளபட்டி சங்கயா, எத்திலோடு குருவையா, பச்ச மலையான் கோட்டை பாலமுருகன் என நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக கட்சியின் பல நிர்வாகிகள், ஊராட்சி செயலார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!