18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெருங்குளத்தில் 31ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தொடக்கம்..

பெருங்குளத்தில் 31ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2020, 7:37 pm

இராமநாதபுரம் மாவட்டம் இத்திஹாத்துல் நவ்ஜஹான் முஸ்லிம் சங்கம் (ஐ என் எம் எஸ்) சார்பில் 31 ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பெருங்குளம் கால்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கியது.

பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் கௌரவத் தலைவர் தா.சாகுல்ஹமீது தலைமை வகித்தார். பெருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஜி.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.  இராமநாதபுரம் சின்னக்கடை சித்தார்கோட்டை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தொடங்கி வைத்தார்.  பெருங்குளம் மேற்கு தெரு தலைவர் கருப்பையா, கிழக்கு தெரு தலைவர் நாகசுந்தரம்,  ஜமாத் தலைவர் ம.இ.அ.மு.அப்துல் நாபிஃ ஊ, உதவி தலைவர் எஸ். நல்ல மீரான் கனி, செயலாளர் எம்.கே.அப்துல் சுபஹான், பொருளாளர் எம்..செய்யது யாசீர் அலி, ஐ என் எம் எஸ் சங்க தலைவர் எம்.இஸ்மாயில் கனி, துணை தலைவர் எஸ்.சுபுஹத்துல்லா, செயலாளர் கே.அப்துல் ஹலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை,  கோட்டைபட்டினம்,  கானாடுகாத்தான், கழனிவாசல், இளையான்குடி,  பண்ணக்கரை,  கீழக்கரை, பெரியபட்டணம், சாத்தான்குளம்,  மண்டபம்,  முனியன் வலசை, முதுனாள்,, பெருங்குளம், , சித்தார்கோட்டை, சின்னக்கடை, காரிக் கூட்டம், , குப்பன்வலசை, புதுமடம், ஆற்றாங்கரை, குலசேகரக்கால், தேரிருவேலி, இருமேனி மற்றும் பெருங்குளம் உள்பட 28 அணிகள் கலந்து கொள்கின்றன. மார்ச் 5 ஆம் தேதி  காலிறுதி ஆட்டம் , 6 ஆம் தேதி .அரையிறுதி ஆட்டம், 7 ஆம் தேதி மூன்றாம் பரிசுக்கான போட்டி நடைபெறுகிறது. மார்ச் 8 ல் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

மர்ஹூம் உ.சீ.மு. கட்டி முகமது நினைவாக  முதல் பரிசு கோப்பை, மர்ஹூம் ஏ.என்.சாகுல்ஹம்து, மர்ஹூமா ஏ.சல்மாகு பீவி நினைவாக இரண்டாம் பரிசு கோப்பை வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசு கோப்பையை  ம.இ முஸ்தபா சன்ஸ்,  நான்காம் பரிசு கோப்பையை ஓ.கே.ஏ.ஹாபிஸ் அலி ஆகியோர் வழங்குகின்றனர். தொடர் ஆட்ட வீரருக்கான பரிசு கோப்பையை எச்.துல் ஹக்கீம் வழங்கவுள்ளார். தினசரி சிறந்த ஆட்ட வீரருக்கு ஏ.முஹமது யூசுப் பரிசு வழங்குகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!