18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீடு மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு நிற்கதியாக நிறுத்தியதால் மனமுடைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி!

வீடு மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு நிற்கதியாக நிறுத்தியதால் மனமுடைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி!

எழுதியவர்: Askar February 24, 2020, 2:22 pm

வீடு மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு நிற்கதியாக நிறுத்தியதால் மனமுடைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி!

மதுரை மாவட்ட கருவேலம்பட்டியை சேர்ந்த பெருமாள் வயது 72, என்பவரின் மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது மனைவி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய நிலையில் அவரது பென்ஷன் பணம் சுமார் 7 1/2 லட்சம் பணம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தநிலையில் பெருமாளின் மகன்களான வீரபத்ரன், ராமநாதன் ஆகியோர் மனைவியரின் பேச்சைக் கேட்டு தன்னை கவனிக்காமல், தான் இருந்து வந்த சொந்த வீட்டை அபகரித்ததோடு, மனைவியின் பென்சன் பணத்தையும் பரித்து தன்னை நிர்கதியாக நிற்க விட்டனராம்.

இதனால் மன உளைச்சல் அடைந்த பெருமாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!