17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்..

கீழக்கரை ரோட்டரி சங்கம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2020, 1:10 am

கீழக்கரை ரோட்டரி சங்கம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் கீழக்கரை அருகிலுள்ள லட்சுமிபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாம் அரச ட்டரி சங்க தலைவர் முனிய சங்கர் தலைமையில், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் முன்னிலையில், முன்னாள் ரோட்டரி சங்கம் தலைவரும் வட்டார மருத்துவ அலுவலருமாண டாக்டர் செய்யது ராசிக் தீன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் இம்முகாம் அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர்கள், ஊர் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த மருத்துவ முகாமில் 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர். இம்முகாமில் கண் பரிசோதனை, இசிஜி,  ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகிய நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ரோட்டரி சங்க பொருளாளர் செல்வ நாராயணன், உறுப்பினர்கள் மூர்ஹசனுதீன், தவமணி, சிவகார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!