17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..

கீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2020, 2:25 pm

கீழக்கரை கிழக்குத் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில்11ம் வகுப்பு மாணவ,  மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று (22/02/2020) நடைப்பெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ், இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி,  இராமநாதபுரம் மாவட்ட கல்வி அதிகாரி பாலதண்டாயுபாணி,  இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன்,  பள்ளி தாளாளர் டாக்டர் சாதிக் கிழக்கு,  தெரு முஸ்லிம் ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, கிழக்குத்தெரு ஜமாஅத் துணைத்தலைவர் முகம்மது அஜிஹர்,   பள்ளித் தலைமை ஆசிரியர் முகமது மீரான் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இதில் 462மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு  மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கல்வி அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் பள்ளி நிர்வாகத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு செய்தியாளர்:- எஸ்.கே.வி.சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!