22 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சாத்தான்குளம் அரசுப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாட்டம்…

இராமநாதபுரம் சாத்தான்குளம் அரசுப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2020, 7:51 pm

இராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா சிறப்பாக கொண்டப்பட்டது.

பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற மாணவர்கள் “நமது தாய்மொழியாம் தமிழ் நாள் விழாவை” சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். தமிழ்மொழியின் சிறப்புகளை பற்றியும் தாய்மொழியின் அவசியத்தையும் ஆசிரியர் ஜெரோம் மாணவர்களுக்கு உரையாற்றினர்.

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாளன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக பள்ளி அளவில் மாணவர்கள் அனைவருக்கும் ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி, வாசிப்பு திறன் போட்டி, எழுத்து போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 29 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவிகள் தமிழ் மொழி பெருமை பறைசாற்றும் பாடல்கள் 6 வகுப்பு மாணவிகள் பாடினர், 8 வகுப்பு மாணவர் கமலக்கண்ணன் தமிழே ஓடிவா…. ஆடிவா என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். மேலும் 9 வகுப்பு மாணவி சபர்மதி மற்றும் மாணவர் நந்தகுமார் தமிழின் பெருமைக்குரிய சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.

பள்ளி தமிழ் இலக்கிய மன்ற சாந்தி பேசுகையில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. மாதம் ஒரு மொழி அழிந்து கொண்டுவருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தியது. சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்… மேலும் தமிழ்மொழியானது தமிழ் இலக்கிய வரலாற்று பெருமை கொண்டது. தமிழ் எந்த மொழியின் கலப்பு அற்ற மொழி, தனித்தன்மை வாய்ந்தது, ஆகையால் தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமிழ் மொழியை அரசு பள்ளிகளில் மாணவர்களாகிய நீங்கள் தான் பாதுகாத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழ்மொழி பெருமையை அரசு பள்ளி மாணவர்கள் தான் உங்களது சிறப்பான தமிழ் படைப்புகள் மூலம் தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்று பேசினர்.

நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியர் கதிர்மணி தொகுத்து வழங்கினார். நிறைவாக சுவாமி தாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிந்து, மாணவ, மாணவியர் மற்றும் ஆசியர்கள் இணைந்து நமது “தாய்மொழியாம் தமிழ் நாள்” குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மாணவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். மாணவ, மாணவியர்கள் அனைவரும் சத்தான் குளம், முனியன் வலசை மற்றும் பள்ளி சார் பகுதி வாழ் மக்களியிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர்கள் திருமூர்த்தி, புனிதா ராணி, ரேவதி, வத்சலா தேவி, சுமதி, கனிமுத்து மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ் ஆசிரியர் சாந்தி மற்றும் தலைமை ஆசிரியர் செல்வராஜ் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!