17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நமாண்டஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன..

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நமாண்டஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன..

எழுதியவர்: Askar February 21, 2020, 10:18 am

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நமாண்டஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன..

பொங்கலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக பஞ்சப்பள்ளி அருகே உள்ள நமான்டஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, இராயக்கோட்டை மற்றும் தர்மபுரி, கிருஷ்னகிரி  சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன்   கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்தனர் அதனை தொடர்ந்து காளைகள் வாடிவாசல் வழியாக  ஒவ்வென்றாக அவிழ்த்து விடப்பட்டன சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு கொண்டு காளையை விரட்டி சென்றனர் இதனை காண 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து கண்டு களித்தனர்.

சிறப்பாக மாடுகளை   பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் பிடிபடாமல் ஓடிய மாடுகளுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் மாடுகள் ஓடும் பொழுது பார்வையாளர்கள் மீது பாயாமல் இருப்பதற்காக பாதையின் இரண்டு பக்கமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன 20க்கும் பஞ்சப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!