முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழிற்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (20/02/2020) காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வை செ.மதுக்குமார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இராமநாதபுரம் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிரா பானு கமால் மாணவிகளிடம் வேலைவாய்ப்பு பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும், உனக்கு தகுத்தாற் போல் பிடித்தமான வேலை செய்தால் வேலை எளிதாக இருக்கும் என்று கூறி வாழ்த்துரை ஆற்றினார். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் திரு. கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர் இராமநாதபுரம் , டாக்டர் N.O.சுகபுத்ரா, இ.ஆ.ப, சார் ஆட்சியர் இராமநாதபுரம் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவிகளிடம் உங்களால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்றும் வேலை, ஒழுக்கம், மனதை ஒருமுகப்படுத்தி ஆசிரியர், நண்பர் மற்றும் பெற்றோரின் சொல் கேட்டால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்றும் உங்கள் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலே வெற்றி அடைய முடியும் என்று சிறப்புரை ஆற்றினார். சார் பதிவாளர் அவர்கள் மாணவிகளிடம் எந்த ஒரு விஷயம் தெரிந்துக் கொள்ள நாம் காட்டும் ஆர்வத்தை படிப்பிலும் காட்டினால் சாதிக்கலாம், தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் தேவையான உதவிக்கரம் நீட்ட அரசு தயராக இருக்கின்றன என உரையாற்றினார்.
திறனறி தேர்வுகள் பற்றி .மு.கருணாகரன், உதவி இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வழிகாட்டல் நிலையம் திருநெல்வேலி மாணவிகளிடம் தேர்வு எதிர்க்கொள்ளும் விதத்தை எடுத்துரைத்தார். தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வெற்றிப் பெற்ற மாணவிகள் செல்வி. H.நூர்ஷிபா, செல்வி B.கோகிலா தான் வெற்றி அடைய செய்த முயற்சிகளை எடுத்துரைத்தார்.
போட்டி தேர்வுகளை எதிர்க்கொள்வது எப்படி என்று திரு.த. அருண்நேரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எடுத்துரைத்தார். இறுதியாக திரு. அ. முத்துமருது இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நன்றியுரை வழங்கினார்.இந்நிகழ்வை IQAC ஒருங்கிணைப்பாளர் அன்வர் ரொ சாகின், வேலைவாய்ப்பு செல் ஒருங்கிணைப்பாளர் S.ஜெர்மியா ஜென்மரசி சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.
























You must be logged in to post a comment.