17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தினைக்குளம் அரசுப்பள்ளியில் தொல்பொருட்கள் கண்காட்சி

தினைக்குளம் அரசுப்பள்ளியில் தொல்பொருட்கள் கண்காட்சி

எழுதியவர்: mohan February 20, 2020, 7:06 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் “தொல்பொருட்கள் காட்டும் வரலாறு” என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர்  கு.தமயந்தி  தலைமை வகித்தார். வரலாற்று மன்றச் செயலர் சு.பிரேமா அனைவரையும் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் சி.ராமச்சந்திரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். மண்டபம், ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, வரலாற்றுக்கு ஆதாரத்தைத் தரும் தொல்பொருள்கள் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள எவ்வாறு உதவுகின்றன என்பதை அப்பொருள்கள் மூலம் விளக்கினார்.

இதில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், இரும்புக்கால கருப்பு சிவப்பு மண் குவளைகள், பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், தக்களி, வட்டச்சில்லுகள், இரும்புத்தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அவற்றைப் பார்த்து அறிந்துகொண்டனர். பட்டதாரி தமிழாசிரியர் நா.விஜயலட்சுமி நன்றி கூறினார். கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை  மாணவர்கள் முகம்மது சகுபர் சாதிக், ஷிபான் அலி, பிரதிபா, சோபனா, அப்சல்கான், தாரிக் அலி, ஹரிணி ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!