மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாலுகா அலுவலகத்தை அடுத்துள்ள மெய்யணம்பட்டி கிராமத்திற்கு செல்லும் நுழைவுவாயிலில் உள்ள பாலத்தின் கீழே ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் கடந்த 10நாட்களுக்கு மேலாக உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது.
இதனால் கீரிபட்டி, பாப்பாபட்டி, உத்தப்பநாயக்கணூர் போன்ற கிராமங்களுக்கு குடிநீர் செல்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டு அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை உடைப்பை சரிசெய்யவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.