17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசீம்பிவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினவிழா

கீழக்கரை தாசீம்பிவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினவிழா

எழுதியவர்: mohan February 20, 2020, 4:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இன்று ( 20.02.2020) சர்வதேச தாய்மொழி தினவிழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் கொண்டாடப்பட்டது. வணிகவியல் மற்றும் கணினிப்பயன்பாட்டியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி மு.மு.ஹைரூன் ஹபிலா, வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் நிர்வாகப்பிரிவு முனைவர்.ப.சுலைஹா ஷகில் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்மொழியின் சிறப்புகள், பெருமைகள் குறித்து வணிகவியல் துறை உதவி பேராசிரியை செ.பாத்திமா ருஸ்தா சிறப்புரையாற்றினார்.. கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி அ.தா.பெளசியா பேகம்,நன்றி கூறினார். தமிழை மொழிப்பாடமாக பயிலும் 350க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ் துறைத் தலைவர், பேராசிரியர்கள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!