17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் டேங்குகள், குழாய்களை சீரமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

உசிலம்பட்டி அருகே காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் டேங்குகள், குழாய்களை சீரமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

எழுதியவர்: mohan February 20, 2020, 3:41 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் உள்ளது வடகாட்டுப்பட்டி கிராமம், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக முறையானகுடிநீா் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நகராட்சி கவுன்சிலர்கள் இருந்த போது அமைத்து கொடுத்த நீர் தேக்க தொட்டி மற்றும் குடிநீர் இணைப்புகள் பழுதடைந்து காட்சி பொருளாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்காததால் குடிநீருக்காக இந்த கிராம மக்கள் இரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னம்பாரிபட்டிக்கு சென்றே குடிநீர் எடுத்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் நகராட்சி கவுன்சிலர்கள் இல்லாத நிலையில் நகராட்சி எல்லைப் பகுதியில் உள்ள இந்த கிராமத்தை கண்டு கொள்வதில்லை எனவும், தினந்தோறும் குப்பைகளை அள்ளக் கூட நகராட்சி ஊழியர்கள் வருவதில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!