17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

எழுதியவர்: mohan February 20, 2020, 3:08 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா, தமிழ்த்துறை பேரவை விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார். கல்லூரி ஆங்கில துறைப் பேராசிரியர் லதா வரவேற்றுப் பேசினார் . நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெற்றோர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் தலைவர் பேராசிரியர் குருவம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.விழாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்தும், தற்போது நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து தமிழக காவல்துறை அறிமுகப்படுத்திய காவலன் செயலி குறித்தும் விரிவாக பேசப்பட்டது.இந்நிகழ்ச்சியில் துறை தலைவர் பேராசிரியர்கள் நா. சீனிவாசன், முருகவேல், சு. சொ. சீனிவாசன் சின்னச்சாமி , மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் செல்வன், சுப்பம்மாள், கவிதா மகேஸ்வரி இன் முகமது இக்பால் மன்சூர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேரவைத் தலைவி ஷோபனா நன்றி தெரிவித்தார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!